search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிறவிபெருமாள் ஐயன்
    X
    பிறவிபெருமாள் ஐயன்

    பிறவிபெருமாள் ஐயன் கோவிலில் புரட்டாசி கொடை விழா 4 நாட்கள் நடக்கிறது

    முதுமொத்தன்மொழி பிறவிபெருமாள் ஐயன் கோவில் புரட்டாசி கொடை விழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.
    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழியில் ஆனைகுடி நாடார்கள், ஆனைபேரன் நாடார் மற்றும் கோனார் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட பூரண புஸ்கலா சமேத பிறவிபெருமாள் ஐயன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவில் புரட்டாசி மாத கொடை விழா வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. 25-ந் தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு பு‌‌ஷ்ப அலங்கார பூஜை நடைபெறுகிறது.

    26-ந் தேதி காலை 10 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு, 10 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கின்றது.

    27-ந் தேதி காலை 7 மணிக்கு பால்குடம் ஊர்வலம், 10 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, இரவு 7 மணிக்கு திரைப்பட மெல்லிசை விருந்து, 10 மணிக்கு வில்லிசையை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பு‌‌ஷ்பாஞ்சலி, தீபாராதனை நடக்கிறது. 28-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு சங்கிலி பூதத்தார் படைப்பு பூஜை நடக்கிறது. 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×