நாகர்கோவில், கோட்டார் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது.
நாகர்கோவில், கோட்டார் சக்தி விநாயகர் கோவில் மற்றும் குலசேகர பெருமான் சமேத குலசேகர நங்கை அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி 11-ந் தேதி வரை நடக்கிறது. இன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு கோ பூஜை, தீபாராதனை, 10.30 மணிக்கு புனித நீர் எடுத்து வருதல், மாலை 6 மணிக்கு வாஸ்து ஹோமம், இரவு 8 மணிக்கு திசா ஹோமம், தீபாராதனை போன்றவை நடக்கிறது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் திருமுறை பாராயணம், கணபதி பூஜை, பிரசாதம் வழங்குதல், லட்சுமி பூஜை, சாந்தி பூஜை, யாக சாலையில் விநாயகர் வழிபாடு, கும்ப அலங்காரம் போன்றவை நடக்கிறது.
9-ந் தேதி முதலாம் கால யாகசாலை பூஜையும், 10-ந் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் ஆகியவை நடைபெறும்.
விழாவின் இறுதி நாளான 11-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, காலை 6 மணிக்கு தீபாராதனை, 6.30 மணிக்கு சக்தி விநாயகர் கோவிலில் மூலவர் மற்றும் விமானத்துக்கு கும்பாபிஷேகம், காலை 7 மணிக்கு குலசேகரநங்கை அம்மன் கோவிலில் மூலவர் மற்றும் விமானத்துக்கு கும்பாபிஷேகம், தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை, இரவு சாமியும் அம்பாளும் வீதி உலா வருதல் போன்றவை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.