
1. பசும்பால்- ஆரோக்கியம், ஆயுள் விருத்தி
2. தயிர் - பாரம்பரிய விருத்தி
3. நெய் - மோட்சம்
4. கோமியம்- தீட்டு நீக்கம்
5. சாணம் - கிருமி ஒழிப்பு
பஞ்சகவ்வியத்தால் கிடைக்கும் மிகப்பெரிய நன்மை என்ன தெரியுமா?
கருவறைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் எப்போதும் குளிர்ச்சியில் இருக்கின்றன. பெரும்பாலான கருவறைகளில் சூரிய ஒளி படுவதில்லை. எனவே, மிக்கக் குளிர்ச்சி, மிக்க இருட்டின் காரணமாக, கருவறைகள், சிலைகள், இடுக்குகள், பிளவுகள் முதலான இடங்களில் கிருமிகளும், பாசிகளும், பூச்சிகளும் வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
பஞ்ச கவ்வியம் என்பது ஒரு தெய்வீக மருந்து. உடம்பின் புறத்தே தூய்மை செய்வது தண்ணீர், அகத்தே தூய்மை செய்வது பஞ்ச கவ்வியம். எனவே தான் வழிபாட்டுச் சடங்குகளில் பஞ்சகவ்வியம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது.
பசுக்களில் பல்வேறு நிறங்களைக் கொண்ட பசுக்கள் உள்ளன. பசுக்களின் நிறத்திற்கும் அவை தரும் பாலின் தன்மைக்கும் இடையில் தொடர்பு உண்டு.
பொன்னிறப் பசுவிடமிருந்து பாலும், நீல நிறப் பசுவிடமிருந்து தயிரும், கருநிறப் பசுவிடமிருந்து நெய்யும், செந்நிறப் பசுவிடமிருந்து கோசலமும், தனித்தனியே எடுத்து பஞ்சகவ்யம் தயாரிக்க வேண்டும். சிவனுக்குரிய அபிஷேகப் பொருள்களில் பஞ்ச கவ்யமே தலைசிறந்தது.
பசும் பாலில் சந்திரனும், பசுவின் தயிரில் வாயு பகவானும், கோமியத்தில் வருணதேவனும், பசும் சாணத்தில் அக்னி தேவனும், நெய்யில் சூரிய பகவானும் வாசம் செய்கின்றனர்.
இது நோய் நீக்கும் மாமருந்தாகும்.
பசுவின் பால் ஐந்து பங்கு. பசுவின் தயிர் மூன்று பங்கு. பசுவின் நெய் இரண்டு பங்கு. பசுவின் நீர் ஒரு பங்கு. பஞ்சாணம் கைப் பெருவிரல் அளவில் பாதியும் சேர்க்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
இறைவழிபாட்டில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் முதலானவற்றில் பஞ்சகவ்ய அபிஷேகம் செய்வார்கள். இந்த பஞ்சகவ்யத்தை உண்டால் நாட்பட்ட நோய்கள் அகலும். வியாதிகள் வராமலிருக்க தடுப்பாகவும் இருக்கும் என்று வேதங்கள் கூறுகின்றன.
பஞ்சகவ்யத்தைத் தயாரிக்கும் பொழுது காயத்ரி மந்திரத்தைச் சொல்லி கோமூத்திரத்தையும், கந்தத்த வாரம் என்ற மந்திரத்தால் பஞ்சாணத்தையும் ஆபயா யஸ்ப என்று தொடங்கும் மந்திரத்தால் பசுந்தயிரையும் சூக்ரமஸி என்று தொடங்கும் மந்திரத்தால் பசு நெய்யையும் மந்திரித்து சேர்த்தால்தான் பஞ்சகவ்யம் உருவாகும். இதுதான் சக்திவாய்ந்தது.
பஞ்சகவ்யத்தைத் தமிழில் ஆனைந்து என்று அழைப்பார்கள். ஆயுர்வேதத்திலும் பஞ்சகவ்யம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. நரம்புத் தளர்ச்சிக்கும், காக்காய் வலிப்பு நோய்க்கும் பஞ்சகவ்யம் நல்ல மருந்து என்பர். புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.