search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்ற காட்சி.
    X
    நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்ற காட்சி.

    பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

    நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லிக்குப்பத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோவில் வளாகத்தில் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதிக்கு தனி சன்னதி உள் ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றது.

    இதையொட்டி கடந்த 25-ந்தேதி பிரசன்ன வெங்கடாசலபதிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சுதர்சன ஹோமம் மற்றும் 108 கலசாபிஷேகம், முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை பூலோகநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் 2-ம் கால யாகசாலை பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் மாலையில் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மேள, தாளம் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்னவெங்கடாசலபதிக்கும், புவனாம்பிகை உடனுறை பூலோகநாதருக்கும் ஒரே மேடையில் தனித்தனியாக திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதில் நெல்லிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விஜயலட்சுமி மற்றும் பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் குமார், ஹரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×