search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவில் கொடை விழாவில் மஞ்சள்பெட்டி ஊர்வலம் நடந்தபோது எடுத்தபடம்.
    X
    கோவில் கொடை விழாவில் மஞ்சள்பெட்டி ஊர்வலம் நடந்தபோது எடுத்தபடம்.

    சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் மஞ்சள் பெட்டி ஊர்வலம்

    திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் மஞ்சள்பெட்டி ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    தென் தமிழத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்கு தெருவில் அமைந்துள்ள சுடலை ஆண்டவர் கோவிலும் ஒன்றாகும். தண்ணீரில் விளக்கு எரிந்த அதிசயம் நடந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் கொடை விழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான கொடை விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. விழா நாட்களில் கோலப்போட்டி, பல்சுவை கலைப்போட்டி, விளையாட்டு போட்டிகள், நாடகம், இன்னிசை கச்சேரி, சமய சொற்பொழிவு, சுமங்கலி பூஜை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும், அன்னபூஜை, தொடர் சிறப்பு அன்னதானமும் நடந்தது.

    நேற்று மதியம் மன்னர்ராஜா கோவிலில் இருந்து மேளதாளத்துடன் மஞ்சள்பெட்டி ஊர்வலம் புறப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மஞ்சள்பெட்டி ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள், சுவாமி மஞ்சள் நீராடுதல் நடந்தது. இரவு பரிசளிப்பு விழா, சிலம்பாட்ட போட்டி, இன்னிசை கச்சேரி, பொம்மலாட்டம், கரகாட்டம், மகுட ஆட்டம், சமய சொற்பொழிவு, சர்க்கஸ் நிகழ்ச்சிகள், பொருட்காட்சிகள், சுவாமி முட்டை விளையாடுதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    Next Story
    ×