search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிருஷ்ணன்
    X
    கிருஷ்ணன்

    கிருஷ்ண ஜெயந்தி: கிருஷ்ணன் பற்றிய சிறப்பு தகவல்கள்

    ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீகிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். கிருஷ்ணன் பற்றிய சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    கிருஷ்ண ஜென்ம பூமி

    டெல்லியில் இருந்து ஆக்ரா செல்லும் வழியில் அமைந்த மதுராவைச் சுற்றியுள்ள பகுதிகளான கோகுல், பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகிய மூன்று இடங்களையும் இணைத்து, 'கிருஷ்ண ஜென்மபூமி' என்கின்றனர். இவை மூக்கோணவடிவில் அமைந்துள்ளன. ஆழ்வார்கள் இத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளனர். மதுராவில் கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள கோவிலுக்கு 'ஜென்மபூமி' என்று பெயரிட்டுள்ளனர்.
    கிருஷ்ண மரம்

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை அருகில் உள்ள கிராமம் அரியதுறை. இங்கே ஸ்ரீமரகதவல்லி சமேதராக ஸ்ரீவரமூர்த்தீஸ்வரர் அருள்பாலிக்கும் ஆலயத்தில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அம்சமாக ஓர் அரசமரம் வணங்கப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணர் வேஷம்

    சில ஊர்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று உற்சவர் புறப்பாட்டின்போது, முன்னால் ஆண்களும் பெண்களும் கோலாட்டம் ஆடியபடி, கிருஷ்ண கானங்களை இசைத்தபடி செல்வர். கரகாட்டம், சிலம்பாட்டம், தீப்பந்த சாகசங்களும் நடைபெறும். ஊரைச் சுற்றிவந்து உற்சவரைத் திரும்பவும் ஆலயத்துக்குள் எழுந்தருளச் செய்வார்கள்.

    வழுக்குமரம் ஏறுதல்

    கிராமங்களில், கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது ஒரு மரத்தை நட்டு அதில் எண்ணெயைத் தடவிவிடுவார்கள். அதன் உச்சியில் பரிசுப் பொருள்களாக பழங்கள், பணம் ஆகியவற்றைக் கட்டிவிடுவார்கள். வழுக்குமரத்தின் மீதேறி உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளை எடுக்க வேண்டும். இளைஞர் கள் வழுக்கு மரத்தில் ஏறி பரிசுப்பொருட்களைப் பிடிக்க முயலும்போது, பெண்கள் தண்ணீரை அவர்கள்மீது ஊற்று வார்கள். எண்ணெய் பூசப்பட்ட மரம் வழுக்கும். தண் ணீரை ஊற்றும்போது மேலும் வழுக்கும் யாராவது ஒருவர் கஷ்டப்பட்டு வழுக்குமரத்தில் ஏறி பரிசுப்பொருளை அடைந்துவிடுவார்கள்.

    உறியடி

    உறி ஒன்றில் சட்ட ஒன்றைக் கட்டி வைத்து கயிற்றில் தொங்க விட்டிருப்பார்கள். கம்பால், உறியில் உள்ள சட்டியைத்தட்டி உடைக்கவேண்டும்.அவ்வாறு உடைக்க முயற்சி செய்யும்போது கயிறை மேலும்கீழும் ராட்டினம் போன்ற கருவி மூலம் இழுப்பார்கள். அப்போது பெண்கள், உறியை அடிக்க முயற்சிசெய்யும் இளைஞர்களின் மீது தண்ணீரை ஊற்றித் தடை செய்யமுயற்சிப் பார்கள். சிரமப்பட்டு யாராவது ஒருவர், கம்பால் உறியிலுள்ள சட்டியை உடைத்துவிடுவார். அவருக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். விளையாட்டாகவும் பொழுதுபோக்காகவும் நடைபெறும். இது, கோகுலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் வெண்ணெய் திருடிய நிகழ்ச்சியை நினைவு கூறவே.

    துளசி மாலை அணிவது ஏன்?

    கண்ணன் துளசி மாலை அணிந் திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசிமாலை அணிந்து கொள்வான். வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் நுழையாமல் தடுக்க, வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள்.

    விஷ்ணுகிராந்தி

    வயல்வெளிகள், ஆற்றங்கரைகளில் குப்பையோடு குப்பையாக வளரும் ஒரு வகைச்செடி ‘விஷ்ணுகிராந்தி’ இதன் பூக்கள் பெருமாளின் கையிலுள்ள சக்கரம் போல இருக்கும். இதில் பெருமாள் இருப்பதாக நம்பிக்கை, இந்த பூவை தாயத்தில் சேர்த்து கட்டிக்கொண்டால் உடல்பலம் மற்றும் தைரியம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

    பணமில்லாமல் பசுதானம்

    ‘கோவிந்தா’ என்று சொன்னால் ‘போனது வராது’ என்று பொருள்படும் இதனால் தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், ‘பணம்’ கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது. கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொரு ளும் உண்டு. இதை ‘கோ இந்தா’ என்றும் பிரிக்கலாம். அப்போது ‘கோ’ என்றால் ‘பசு’ ‘இந்தா’ என்றால் ‘வாங்கிக் கொள்’ என்று பொருள் வரும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

    கண்ணனின் ஆபரணங்கள்

    பெருமாள் சிலையை ’திவ்ய மங்கள விக்ரகம்’ என்பர். அவரது திருமுடியில் அணியும் ஆபரணத்தின் பெயர் ‘திருவபிடேகம்’ எனப்படும். திருப்பாதத்தில் அணியும் ஆபரணத்திற்கு, ‘நூபுரம்’ என்று பெயர்.பெருமாளை முதலில் திருவடியை தரிசித்தபின்பே, திருமுகத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

    கூன் நிமிர்ந்த அதிசயம் !

    ராமாயண காவியத்தில் பல பிரச்சினைகளுக்கு காரணமாக வருவாள் ஒரு கூனி. கிருஷ்ணா வதாரத்திலும் ஒரு கூனி உண்டு. ஆனால் இந்த கூனி நல்லவள்.

    ஒரு முறை கிருஷ்ணரும், அவரது சகோதரர் பலராமரும் கம்சனின் அரண்மனைக்கு வரும்போது வழியில் கம்சனின் பணிப்பெண்ணாக வளைந்த கூனுடன் நின்று கொண்டிருதாள் அந்த கூனி. திருவத்திரை என்னும் பெயர் கொண்ட அவள், கிருஷ்ணரையும், பலராமரையும் கனிவுடன் உபசரித்தாள். அவளது பணிவைக் கண்டு மகிழ்ந்த கிருஷ்ணர், அவளது கூன் உடலை அழகான உடல் அமைப்பாக்கி அருள் புரிந்தார்.

    சொர்க்க துவாரமும் மோட்ச துவாரமும்


    வைணவ திருத்தலங்களில், பெருமாள் பள்ளிக் கொண்டிருக்கும் கோலத்தைத் தரிசித்திருக்கிறோம். அதேபோல் ஸ்ரீகிருஷ்ணர் சயன கோலத்தில் அருளும் தலம் துவாரகை. இந்த தலத்தில் கோவில் கொண்டிருக் கும் கண்ணனுக்கு துவாரகீசன் என்று திருநாமம். ஐகத் மந்திர் எனப்படும் இங்குள்ள கோவிலின் பிரதான வாயிலை சொர்க்க துவாரம் என்பார்கள். எப்போதும் திறந்தே இருக்கும். இந்த வாயிலைக் கடந்தால் மோட்ச துவாரம். இதையும் தாண்டிச் சென்றால் கண்ணனின் திவ்விய தரிசனம் கிடைக்கும்.

    கண்ணன் ஆடிய கூத்து !

    கண்ணன் ஆடிய கூத்துக்கள் மூன்று. மதம் பிடித்த யானையின் தந்தத்தை ஒடித்தபோது ஆடியது அல்லியக் கூத்து பேரன் அநிருத்தனை அசுரன் ஒருவன் சிறைப்பிடித்து வைத்தபோது பஞ்சலோகத்தால் அன குடத்தைத்தலையில் வைத்தபடி ஆடியது குடக்கூத்து. வாணன் எனும் அசுர னைப்போரிட்டு அழித்தபோது ஆடியது மல்லாடல் கூத்து!
    Next Story
    ×