
திருவிழாவில் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்கும் வசந்தம் முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. பெருமாள் ராஜ அலங்காரத்தில் சன்னதியில் இருந்து முத்துப்பல்லக்கில் புறப்பட்டு இரவு முழுவதும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெருக்களில் காத்திருந்த பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து, அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.
அதன்பின்னர் நேற்று அதிகாலை பெருமாள் சன்னதியை அடைந்தார். நேற்று இரவு 9 மணியளவில் ஊஞ்சல் கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) இரவு விடையாத்தி குதிரை வாகனத்தில் பெருமாள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மகேஸ்வரி, செயல் அலுவலர் நாராயணி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.