search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் யானை வாகனத்தில் வீதி உலா
    X
    சமயபுரம் மாரியம்மன் யானை வாகனத்தில் வீதி உலா

    சமயபுரம் மாரியம்மன் யானை வாகனத்தில் வீதி உலா

    சமயபுரம் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    ஆவணி மாதம் முதல் தேதியன்று அனைத்து கோவில்களிலும் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சாமி புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி புறப்பாடு நடைபெற்றது. நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். தொடர்ந்து மாலையில் அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

    இரவில் சிறப்பு அலங்காரத்துடன் யானை வாகனத்தில் எழுந்தருளி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தங்க சிம்ம வாகனம், காமதேனு வாகனம், ரிஷப வாகனம், வெள்ளி காமதேனு வாகனம் ஆகியவற்றில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் மேலாளர் லட்சுமணன், மணியக்காரர் ரமணி மற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×