search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடலூரில் நாகம்மன் கோவில் செடல் திருவிழா
    X
    கடலூரில் நாகம்மன் கோவில் செடல் திருவிழா

    கடலூரில் நாகம்மன் கோவில் செடல் திருவிழா

    கடலூரில் நாகம்மன் கோவில் செடல் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    கடலூர் பஸ்நிலைய வளாகத்தில் அமைந்துள்ள நாகம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் செடல் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான செடல் திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த திருவிழா நாட்களில் தினமும் நாகம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, இரவில் அம்மன் திருவீதி உலா காட்சியும், பக்தி சொற்பொழிவுகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் பெருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அலகு மற்றும் செடல் குத்தி தங்கள் நேர்த்திகடன்களை செலுத்தினார்கள்.

    இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் இரவில் சாமி வீதி உலா நடைபெற்றது. பெருவிழாவின் 10-ம் நாளான இன்று(சனிக்கிழமை) மஞ்சள் நீர் விழா நடைபெறுகிறது.
    Next Story
    ×