search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.
    X
    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.

    இருக்கன்குடி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத 3-வது செவ்வாய்க்கிழமையையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். 10அடி உயரமுள்ள கல்கோட்டைக்குள் இந்த கோவில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசிப்பார்கள்.

    அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விருதுநகர் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டுச்செல்கின்றனர். அதன்படி ஆடி மாத 3-வது செவ்வாய்க்கிழமையான நேற்றும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். மாவிளக்கு எடுத்தும் முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.மேலும் கூழ் வார்த்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவின்போது தான் அம்மன் கோவிலை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பக்தர்கள் பொங்கல் வைத்தும், அக்னிசட்டி எடுத்தும், முடிகாணிக்கை செலுத்தியும், மாவிளக்கு ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    இந்த ஆண்டுக்கான ஆடி கடைசி வெள்ளி திருவிழா வருகிற 16-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான கொடியேற்றம் வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×