search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் கொடை விழா
    X
    முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் கொடை விழா

    முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் 28-ந்தேதி பூக்குழி கொடை விழா

    முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் பூக்குழி கொடை விழா வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.
    ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தலில் உள்ள ஆலமூடு அம்மன் கோவிலில் ஆடி பூக்குழி கொடை விழா வருகிற 28-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. 28-ந் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு விநாயகருக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, 8 மணிக்கு அகண்ட நாம ஜெபம் நடக்கிறது.

    இதற்கிடையே மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு, ஆலமூடு அம்மன் பக்தர்கள் சார்பில் சீர்வரிசை செய்து, அங்கிருந்து கோவில் அறக்கட்டளை பொருளாளர் கிருஷ்ணம்மாள் தலைமையில் “அம்மன் ஜோதி“ அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக முப்பந்தலுக்கு வருகிறது. இதையடுத்து மதியம் அன்னதானம், இரவு தீபாராதனை நடைபெறுகிறது.

    29-ந் தேதி காலை 6 மணிக்கு கலச பூஜை, 8 மணிக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு தீபாராதனை தொடர்ந்து அன்னதானம், 2 மணிக்கு அர்த்த நாரிஸ்வரர் பூஜை, மாலை 4 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வருதல், 5 மணிக்கு யானைகளை வைத்து நடத்தும் கஜ பூஜை, இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    30-ந் தேதி காலை 7 மணிக்கு ஆரல்வாய்மொழி அகலிகை ஊற்று பிள்ளையார் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானைகளுடன் பூங்கரகம், அபிஷேக குடங்கள், வேல் காவடி, பறவை காவடி, சூரிய காவடி ஆகியவை மேளதாளங்களுடன் ஊர்வலமாக ஆலமூடு கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    காலை 8 மணிக்கு 108 கலச பூஜை, அன்னதானம் மதியம் 12.30 மணிக்கு சுவாமிகள் யாகசாலை குளியல், மாலை 4 மணிக்கு தீச்சட்டி எடுத்தல், 5 மணிக்கு தேர் பவனி, 5.30 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    நள்ளிரவு 12.30 மணிக்கு பூ படைப்பு, 1 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்குதல் மற்றும் அதிகாலையில் ஊட்டுப்படைப்பு நடைபெறுகிறது.

    31-ந்தேதி மதியம் 12 மணிக்கு மஞ்சள் நீராடுதல், 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை ஆலமூடு அம்மன் சாரிட்டபிள் அறக்கட்டளை தலைவர் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் சேவா சங்கத்தினர், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×