என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனி மலைக்கோவிலில் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
Byமாலை மலர்18 July 2019 5:55 AM GMT (Updated: 18 July 2019 5:55 AM GMT)
பழனி முருகன் மலைக்கோவிலில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு 16 வகை அபிஷேகம் நடைபெற்றது.
பழனி முருகன் மலைக்கோவிலில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் ஆனந்த விநாயகர் சன்னதி உள்ளது. இங்கு ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆடி மாதம் பிறப்பையொட்டி நேற்று காலை 7.30 மணிக்கு பிரதான கலசம் மற்றும் 3 கலசங்களில் புனித நீர் வைத்து புண்ணியகவாஜனம், விநாயகர் பூஜை, விநாயகர் யாகம் நடைபெற்று பூர்ணாகுதி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஆனந்த விநாயகருக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு வெள்ளிக்கவச அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார். மேலும் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை, மகா தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உபயதாரர் ஹரிகரமுத்து, கோவில் கண்காணிப்பாளர் ராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக் கான ஏற்பாடுகளை பழனி கோவில் பட்டத்துகுருக்கள் அமிர்தலிங்கம் மற்றும் குருக் கள்கள் செய்திருந்தனர். பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story
×