search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வனபத்ரகாளியம்மன் கோவிலில் பல வண்ண மலர்களால் குண்டம் அலங்கரிக்கப்பட்டு கண் திறக்கப்பட்டதை படத்தில் காணலாம்.
    X
    வனபத்ரகாளியம்மன் கோவிலில் பல வண்ண மலர்களால் குண்டம் அலங்கரிக்கப்பட்டு கண் திறக்கப்பட்டதை படத்தில் காணலாம்.

    வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு விழா

    மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு 28-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 23-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. 26-ந் தேதி காலை 10 மணிக்கு லட்சார்ச்சனை, 27-ந் தேதி இரவு 10 மணிக்கு கிராம சாந்தி, 28-ந் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம், மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 29-ந் தேதி மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து குண்டம் திறத்தல், 30-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு பவானி ஆற்றில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    30-ந் தேதி காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி ஆடி அமாவாசையையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறத்தல், காலை 10 மணி முதல் மா விளக்கு, மாலை 6 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா ஆகியவை நடைபெறுகிறது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை, இரவு 8 வாணவேடிக்கை, 2-ந் தேதி மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 6 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, 3-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ஆடிப்பெருக்கு, 5-ந் தேதி காலை 10 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, 6-ந் தேதி மறுபூஜையுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.

    இந்தநிலையில் குண்டம் கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று காலை 8 மணியளவில் நடைபெற்றது. இதையொட்டி பல வண்ண மலர்களால் குண்டம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதன் நடுவில் ஆங்காங்கே கற்பூரம் வைக்கப்பட்டு இருந்தது. கோவில் பூசாரிகள் தண்டபாணி, ஜோதிவேலவன் ஆகியோர் குண்டத்தை வலம் வந்து பூஜை செய்தனர்.

    சிறப்பு பூஜைக்கு பிறகு ஊதுபத்தி, கற்பூர தீபம் ஏற்றப்பட்டு குண்டத்தில் கண் திறக்கப்பட்டு கடா வெட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, உதவி ஆணையரும் செயல் அலுவலருமான எஸ்.வி.ஹர்சினி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×