search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வரதராஜ பெருமாள்
    X
    வரதராஜ பெருமாள்

    வரதராஜபெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா 7-ம் தேதி தொடங்குகிறது

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று உபநாச்சியாருடன் வீதி உலா நடக்கிறது. இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. முன்னதாக திருமஞ்சனம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் ஆகியவை நடக்கிறது.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சூரிய பிரபை, சந்திரபிரபை, பல்லக்கு ராஜகோபாலன் சேவை, யானை வாகனம், புண்ணியகோடி விமானத்தில் வேணுகோபாலன் சேவை, சே‌‌ஷ வாகனம் பரமபதநாதன் சேவை, பல்லக்கு நாச்சியார் திருக்கோலம் மற்றும் ஊஞ்சல் சேவை, இரவு ஆனி தங்க கருட வாகன விழா நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான துவாதச ஆராதனை திருவிழா வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு துவாதச ஆராதனம், பு‌‌ஷ்பயாக உற்சவம், துவஜா அவரோஹணம், பூர்ணாகுதி போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. மறுநாள் 13-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு விடையாற்றி உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துலட்சுமி, தக்கார் சுபத்ரா, தலைமை எழுத்தர் ஆழ்வார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×