search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அத்திவரதர்
    X
    அத்திவரதர்

    அத்திவரதரை எப்போது வழிபடலாம்?

    பெருமாளுக்கு உகந்த நட்சத்திரங்களாக அஸ்தம், திருவோணம், ரோகிணி நட்சத்திர நாட்கள் வரும் தினங்களில் காஞ்சீபுரம் சென்று அத்தி வரதரை வழிபட்டால் கூடுதல் பலன்களை பெற முடியும்.
    அத்தி வரதரை 48 நாட்களுக்கு இருவிதமான கோலங்களில் வழிபடலாம். முதலில் 24 நாட்களுக்கு சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் வழிபடலாம். இந்த இரு கோலத்திலும் அத்தி வரதரை தரிசிப்பது நல்லது.

    முடியாதவர்கள் ஏதாவது ஒரு நாளில் அத்தி வரதரை தரிசிக்கலாம்.
    பெருமாளுக்கு உகந்த நட்சத்திரங்களாக அஸ்தம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்கள் கருதப்படுகிறது. எனவே இந்த நட்சத்திர நாட்கள் வரும் தினங்களில் காஞ்சீபுரம் சென்று அத்தி வரதரை வழிபட்டால் கூடுதல் பலன்களை பெற முடியும்.

    ஜூலை 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நாள் முழுக்க அஸ்தம் நட்சத்திரம் தினமாகும்.

    ஜூலை 18-ந்தேதி (வியாழக்கிழமை) நாள் முழுக்க திருவோணம் நட்சத்திர தினமாகும்.

    ஜூலை 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி வரை ரோகிணி நட்சத்திர தினமாகும்.

    அதுபோல ஆகஸ்டுமாதத்தில்

    5-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7.15 மணிக்கு பிறகு அஸ்தம் நட்சத்திர தினமாகும்.

    ஆகஸ்டு 14-ந்தேதி (புதன்கிழமை) காலை 7 மணிக்கு பிறகு திருவோணம் நட்சத்திர தினமாகும்.

    இந்த 5 நாட்களில் ஏதாவது ஒரு தினத்தன்று வழிபடுவது மிக மிக நல்லது. இந்த நாட்களில் வழிபட முடியாதவர்கள் சுபமுகூர்த்த தினங்களை கணக்கிட்டு வழிபடலாம்.

    ஜூலை 4, 8, 15-ந்தேதிகளில் சுபமுகூர்த்த தினம் வருகிறது.

    12-ந்தேதி ஏகாதசி தினமாகும்.

    16-ந்தேதி பவுர்ணமி தினமாகும்.

    இந்த நாட்களிலும் வழிபட்டால் அத்தி வரதர் அருளை பெற முடியும்.

    ஜூலை 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரோகிணி நட்சத்திர தினத்தன்று ஏகாதசியும் சேர்ந்து வருகிறது. அன்றைய தினம் அத்தி வரதரின் அருள் பார்வை உச்சத்தில் இருக்கும். எனவே அன்றைய தினமும் வழிபட்டால் சிறப்பானது. இந்த நாட்களில் அத்தி வரதரை காண முடியாதவர்கள் தங்களது ஜென்ம நட்சத்திர நாட்களில் சென்று வழிபடலாம்.

    Next Story
    ×