search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்
    X
    இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்

    இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்

    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் படைப்புகளையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஊர்வசி

    விவ்ரிசா-அஹிம்சா தம்பதியரின் மகன்களான நர மற்றும் நாராயணா இருவரும் இமயமலைப் பகுதியில் உள்ள வதரிகாசிரமத்தில் தவம் இருந்தனர். அவர்களின் தவத்தைக் கண்டு பயந்து போன இந்திரன், அவர்களது தவத்தைக் கலைப்பதற்காக பல வழிகளில் முயற்சி செய்தான். பேய் மழை பெய்யச் செய்தான், கொடிய வன விலங்குகளை அனுப்பி வைத்தான்.

    எதனாலும் அவர்களின் தவம் கலையவில்லை. அதைத் தொடர்ந்து தேவலோக நடன மங்கையான ரம்பையையும், மன்மதனையும் அனுப்பி வைத்தான். அவர்கள் இருவரும் வந்தபோது, அந்த இடமே பூக்களாலும், செடி கொடிகளாலும் செழுமை அடைந்தது. இதனை தவம் கலைந்த முனிவர்கள் இருவரும் கண்டனர்.

    ஊர்வசி

    முனிவர்களில் ஒருவரான நாராயணா, அங்கிருந்து அழகிய மலர்களில் ஒரு கொத்தை பறித்து, தன்னுடைய மடியில் வைத்து திரித்தார். அந்த மலரில் இருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். மிகச்சிறந்த அழகியாக இருந்த அவளே ஊர்வசி. அவளை இந்திரனுக்கு பரிசாக கொண்டு சென்று கொடுக்கும்படி, முனிவர் அனுப்பிவைத்தார்.

    உஷா

    பானா என்ற மன்னனின் மகள் உஷா. ஒருநாள் இவளது கனவில் அழகான இளவரசன் தோன்றினான். அவன் யார் என்று அறிந்து கொள்ள உஷா விரும்பினாள். அதை தனது தோழி சித்ரலேகாவிடம் கூற, அவள் உலகில் இருக்கும் இளவரசர்களை எல்லாம் ஓவியமாக வரைந்து காண்பித்தாள். அதில் உஷாவின் கனவில் தோன்றிய முகமும் இருந்தது. அவன் பிரத்யும்னா என்ற அரசனின் மகன், அனிருதா. உஷா, அனிருதாவின் மீது காதல் கொள்ள, மாய மந்திரங்களில் ஜாலம் காட்டும் சித்ரலேகா இருவரையும் சேர்த்து வைத்தாள். இந்த விஷயம் அரசர் பானாவிற்கு தெரியவர, அனிருதா சிறையில் அடைக்கப்பட்டான். இருப்பினும் அனிருதாவின் தந்தை பிரத்யும்னா மற்றும் கிருஷ்ணர் ஆகியோர் அனிருதாவை சிறையில் இருந்து மீட்டதோடு, உஷாவையும் அனிருதாவையும் துவாரகாவிற்கு அழைத்து சென்றனர். அங்கு காதல் ஜோடிகள் ஒன்றாக வாழ்ந்தனர்.

    உபநிடதங்கள்

    பண்டைய தத்துவ இலக்கியமாக உபநிடதங்கள் பார்க்கப்படுகிறது. இந்துக்களின் ஆதார நூல்களின் கீழ் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளது. வேதங்களின் கடைசி தொகுப்பாக இவை உள்ளன. வேதங்களை சுலபமாக அறிந்து கொள்ள இந்த உபநிடதங்கள் உதவுவதால், இவை ‘வேதாந்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது. உபநிடதங்கள் என்பதற்கு, குருவிற்கு மிக அருகில் அமர்ந்து படிப்பது என்பது பொருள். அதற்கேற்ப, ஆசிரியர்-மாணவன் உரையாடல் பாணியிலேயே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. உபநிடதங்களில் 108 தொகுப்புகள் இருக்கின்றன. இவற்றில் 13 உபநிடதங்கள் மிகவும் பழமையானவையாகவும், கி.மு. 500 ஆண்டுகளுக்கு முந்தையதாகவும் உள்ளன. உபநிடதங்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டவை.
    Next Story
    ×