search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிருஷ்ணரின் தந்தையாக போற்றப்படும் வசுதேவர்
    X

    கிருஷ்ணரின் தந்தையாக போற்றப்படும் வசுதேவர்

    பிறந்தவுடன் பெற்ற தாய் தந்தையான வசுதேவரையும், தேவகியையும் பிரிந்த கிருஷ்ணர், தனது சிறு வயதில் கம்சனை வதம் செய்ததும் அவர்களுடன் சேர்ந்தார்.
    மகாபாரதம் என்னும் இதிகாசத்தில் கிருஷ்ணரின் தந்தையாக போற்றப்படுபவர் வசுதேவர். பாண்டவர்களின் மாமன். இவர் கம்சனின் தங்கையான தேவகியை மணம் செய்து கொண்டார். ஆனால் தேவகிக்கு பிறக்கும் பிள்ளையால் தனக்கு ஆபத்து என்று அறிந்த கம்சன், தேவகியை கொல்ல முயன்றான்.

    அப்போது வசுதேவர், “எங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளால்தானே உனக்கு ஆபத்து. எங்களுக்கு பிறக்கும் பிள்ளைகளை உன்னிடமே ஒப்படைத்து விடுகிறேன். தேவகியை ஒன்றும் செய்து விடாதே” என்று கேட்டுக்கொண்டதன் பேரில் தேவகியை கம்சன் கொல்லவில்லை. ஆனால் வசுதேவரையும், தேவகியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எண்ணி சிறையில் அடைத்தான்.

    வசுதேவருக்கும், தேவகிக்கும் பிறந்த பிள்ளைகளை வரிசையாக கம்சன் கொன்று விட, கிருஷ்ணர் பிறந்த போது வசுதேவரின் முன்பாக மாயை தோன்றினாள். அவள், “கிருஷ்ணரை ஒரு கூடையில் வைத்து கோகுலத்தில் நந்தகோபரிடம் சேர்த்து விடுங்கள். அங்கிருக்கும் பெண் குழந்தையை இங்கே கொண்டுவாருங்கள்” என்றும் கூறினாள்.

    அதன்படி ஒரு கூடையில் கிருஷ்ணரை வைத்து யமுனை நதியைக் கடந்து சென்று கோகுலத்தில் விட்டு வந்தார் வசுதேவர். பிறந்தவுடன் பெற்ற தாய் தந்தையான வசுதேவரையும், தேவகியையும் பிரிந்த கிருஷ்ணர், தனது சிறு வயதில் கம்சனை வதம் செய்ததும் அவர்களுடன் சேர்ந்தார்.
    Next Story
    ×