search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சந்திர மங்கள யோகம்
    X

    சந்திர மங்கள யோகம்

    சந்திரனும், செவ்வாயும் கூடி இருப்பது அல்லது இரு கிரகங்களும் நேருக்கு நேரான பார்வை செய்வதன் மூலம் சந்திர மங்கள யோகம் ஏற்படுகிறது.
    செல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன. சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை ‘யோகம்’ என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. அத்தகைய நிலையில் கிரகங்களால் உருவாகும் சுப யோகங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

    சந்திரன் சம்பந்தப்படும் யோகங்களில் பலரும் அறிந்த யோகம் ‘சந்திர மங்கள யோகம்’ ஆகும். செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் சம்பந்தப்பட்ட யோகம் இதுவாகும். பெண்களின் பூவுக்கும், பொட்டுக்கும் சொந்தமாக இருக்கும் செவ்வாய்க்கு, ‘மங்களன்’ என்ற பெயரும் உண்டு. சந்திரனுக்கு ‘சசி’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

    அதன் அடிப்படையில், ‘சசி மங்கள யோகம்’ என்றும் இந்த யோகம் சொல்லப்படுகிறது. சந்திரனும், செவ்வாயும் கூடி இருப்பது அல்லது இரு கிரகங்களும் நேருக்கு நேரான பார்வை செய்வதன் மூலம் இந்த யோகம் ஏற்படுகிறது. மேலும், மேஷ ராசியில் செவ்வாய் ஆட்சி பெற்ற நிலையிலும், கடக ராசியில் சந்திரன் ஆட்சி பெற்ற நிலையிலும் இந்த யோகம் ஏற்படும் என்ற ஜோதிட கருத்தும் உள்ளது.

    அதாவது, மேஷ செவ்வாய் மற்றும் கடக சந்திரன் ஆகிய கிரகங்கள் நான்கு மற்றும் பத்து என்ற அமைப்பில் கேந்திரங்களாக இருப்பதால் இந்த யோகம் உருவாகிறது. இந்த யோகம் காரணமாக, கம்பீர தோற்றம், எதிர்பாராத தன வரவு, செல்வாக்கு, கல்வி, அதிகாரம், காரிய வெற்றி, வெளிநாட்டுப் பயணங்கள், அறுவை சிகிச்சை நிபுணர், கட்டிடக்கலை நிபுணர், விளையாட்டு வீரர் ஆகிய பல்வேறு நிலைகளில் வாழ்க்கைப் பயணம் அமையும். இந்த யோகமானது, லக்னத்துக்கு எந்த பாவக அமைப்பில் வருகிறதோ அதற்கான பலன்களையும் அளிக்கக்கூடியது.

    Next Story
    ×