search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரம்ம ரிஷி பட்டம் பெற்ற வசிஷ்டர்
    X

    பிரம்ம ரிஷி பட்டம் பெற்ற வசிஷ்டர்

    வேத காலங்களில் வாழ்ந்த புகழ்பெற்ற முனிவர் வசிஷ்டர். இவர் பிரம்ம ரிஷி என்று பட்டம் பெற்றவர். இவரை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    வேத காலங்களில் வாழ்ந்த புகழ்பெற்ற முனிவர். பிரம்ம ரிஷி என்று பட்டம் பெற்றவர். சப்த ரிஷிகள் ஏழு பேரில் வசிஷ்டரும் ஒருவர். இவரது மனைவி பெயர் அருந்ததி.

    வேதங்களில் இருக்கும் பல மந்திரங்களை இவர் உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. தேவலோக பசுக்களான காமதேனு, நந்தினி ஆகிய இரண்டையும் வசிஷ்டரே பராமரித்து வந்தார். ஒரு முறை கவுசிகன் என்ற மன்னன், அந்த பசுக்களை கவர்ந்து செல்ல முயன்றான். ஆனால் வசிஷ்டரின் தவ வலிமைக்கு முன்னால், மன்னனின் படை வலிமை தோற்றுப்போனது.

    இதையடுத்து தானும் தவம் இருந்து பிரம்ம ரிஷி பட்டம் பெறுவதாக வசிஷ்டரிடம் அந்த மன்னன் சவால் விட்டான். அந்த மன்னனே பிற்காலத்தில் விஸ்வாமித்திர மகரிஷியாக மாறியவர். ராமாயண காவியத்தில் ராமரின் தந்தையான தசரத மன்னனுக்கு அரசவை குருவாக விளங்கியவர் வசிஷ்டர்.

    அப்போது ராமனையும், லட்சுமணனையும் வனத்திற்கு அழைத்துச் செல்ல விஸ்வாமித்திரர் வந்திருந்தார். தசரத மன்னன் ராமனை காட்டிற்கு அனுப்ப தயங்கிய நிலையில், வசிஷ்டர் கூறியதன் பேரில் விஸ்வாமித்திரரோடு ராமனையும், லட்சுமணனையும் அனுப்பிவைத்தார்.
    Next Story
    ×