search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆண்டாள், ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளிய போது எடுத்த படம்.
    X
    ஆண்டாள், ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளிய போது எடுத்த படம்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம் தொடங்கியது. கோடைகாலத்தையொட்டி நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சந்தனக் காப்பு அணிவிக்கப்படுகிறது.
    ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மே மாதத்தில் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. கோடைகாலத்தையொட்டி நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் மாலையில் ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சந்தனக் காப்பு அணிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் மலர் மாலைகள் அணிவிக்கப்படுகின்றன.

    தொடர்ந்து மேளதாளம் முழங்க சர்வ அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து நாடகசாலை தெருவில் உள்ள வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினர். பின்பு அங்கிருந்து ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. நேற்று வசந்த மண்டபத்தில் வேதபிரான் பட்டர் அனந்தராமகிருஷ்ணன் கோதாஸ்துதி பாடல்களை பாடினார்.

    அதைத்தொடர்ந்து ஆண்டாள் ரங்கமன்னாருக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பூஜைகள் நடை பெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் உள்பட கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×