search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமுருகன்பூண்டியில் திருமுருகநாதசுவாமி சிலை மீது சூரிய ஒளி விழுந்தது
    X

    திருமுருகன்பூண்டியில் திருமுருகநாதசுவாமி சிலை மீது சூரிய ஒளி விழுந்தது

    திருமுருகன்பூண்டியில் திருமுருகநாத சுவாமி சிலை மீது சூரிய ஒளி விழுந்தது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் பிரசித்தி பெற்ற திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். இதன் பின்னர் பங்குனி உத்திரத்தை தொடர்ந்து வரும் பவுர்ணமிக்கு பிறகு 3 நாட்கள் இந்த கோவிலில் திருமுருகநாத சுவாமி மீது சூரிய ஒளி விழும் வினோதமான நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

    இதன்படி இந்த ஆண்டும் பங்குனி உத்திரத்தையொட்டி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்தி சாயும் நேரத்தில் திருமுருகநாதசுவாமி சிலை மீது பாதி அளவு சூரிய ஒளி விழுந்தது. நேற்று மாலை 6.10 மணிக்கு முழு சூரிய ஒளியும் திருமுருகநாத சுவாமி சிலை மீது பட்டது. 6.15 மணி வரை 5 நிமிடம் சூரிய ஒளி சாமி சிலை மீது தொடர்ந்து விழுந்தது. கோவிலில் மூலஸ்தானத்திற்குள் இருக்கும் திருமுருகநாத சுவாமி சிலை மீது சூரிய ஒளி விழுவது வினோத நிகழ்வாக கருதப்படுகிறது. இதையடுத்து சாமிக்கு அலங்கார பூஜை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய் கிழமை) மாலையும் சூரிய ஒளி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×