search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் இன்று பூச்சொரிதல் விழா
    X

    உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் இன்று பூச்சொரிதல் விழா

    திருச்சி மாநகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் இன்று பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.
    திருச்சி மாநகர மக்களின் காவல் தெய்வமாக விளங்குவது உறையூர் வெக்காளியம்மன் கோவில். சோழ மன்னர்களின் காலத்தில் மண்மாரியில் இருந்து மக்களை காத்த தெய்வம் என்ற வரலாற்று சிறப்புக்குரிய வெக்காளியம்மன் கோவிலின் மூலஸ்தானத்திற்கு மேற்கூரை கிடையாது. இங்கு வீற்றிருந்து அருள் பாலித்து வரும் அம்மன் மழை, வெயில், காற்று என அனைத்து இயற்கை சீற்றங்களையும் தன்னகத்தே தாங்கி மக்களை பாதுகாத்து வருகிறார் என்பது ஐதீகமாகும்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதல் வாரத்தில் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. காலை 6 மணி அளவில் கோவில் சார்பில் அறநிலைய துறை அதிகாரிகள் அம்மனுக்கு பூத்தட்டுகளை சாற்றி சிறப்பு பூஜை செய்வார்கள்.

    அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் கொண்டு வரும் பூக்கள் அம்மனுக்கு சாற்றப்படும்.இன்று மாலை 6.30 மணி அளவில் வெக்காளியம்மன் சேவா சங்கம் சார்பில் தில்லைநகர் சாஸ்திரி சாலை சாரதாம்பாள் கோவிலில் இருந்து பூச்சொரிதல் ரதம் புறப்பட்டு கோவிலை அடையும். இதில் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். 
    Next Story
    ×