search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் 31-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு
    X

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் 31-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு

    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் 31-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் போது சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது பிரசித்தி பெற்றதாகும். இதேபோல ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது வழக்கம். அதன்படி திருமொழி சேவித்தல் நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

    நாளை முதல் வருகிற 30-ந்தேதி வரை கோவிலில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி நடைபெற உள்ளது. இரவு 7.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை பொது ஜன சேவை நடைபெறும். வருகிற 30-ந்தேதி இரவு 8.30 மணி முத்துக்குறி, வியாக்யானம், அபிநயம், அரையர் தீர்த்தம், ஸ்ரீ சடகோபம் சாதித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    நாளை முதல் 30-ந்தேதி வரை தாயார் புறப்பாடு இல்லை. மேலும் மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூலஸ்தான சேவை கிடையாது. திருவாய் மொழி எனும் ராப்பத்து நிகழ்ச்சி வருகிற 31-ந்தேதி (வியாழக் கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. வழிநடை உபயங்கள் கண்டருளி, ஆழ்வார்-ஆச்சாரியார் மரியாதையாகி மாலை 6.30 மணி அளவில் ஆஸ்தான மண்டபம் சேர்ந்தடைகிறார்.

    மாலை 6.45 மணிக்கு திருவாய்மொழி கோஷ்டி, அலங்காரம் அமுது செய்தல் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டியும், இரவு 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் தீர்த்த கோஷ்டியும் நடைபெற உள்ளது. இரவு 8 மணி முதல் இரவு 8.45 மணி வரை பொது ஜன சேவை நடைபெறும். இரவு 9 மணிக்கு அலங்காரம், கோஷ்டி வகையறா கண்டருளி திருவாய்மொழி மண்டபத்தில் இருந்து புறப்பாடு நடைபெறும். வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைவார். வருகிற 2-ந்தேதி வரை மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    வருகிற 3-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். மாலை 6.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை ஹிரண்யவதம், அரையர் தீர்த்தம், சடகோபாம் சாதித்தல் நடைபெறும். வருகிற 4-ந்தேதி மாலை 5.30 மணிக்கு தாயார் தீர்த்தவாரி கண்டருளுகிறார். இன்று மாலை 6.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். இரவு 7.15 மணி முதல் இரவு 8.45 மணி வரை திருமஞ்சனம் நடைபெற உள்ளது. வருகிற 5-ந்தேதி மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இயற்பா தொடங்கும். இரவு 8 மணிக்கு தீர்த்த வினியோகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணி முதல் மூலஸ்தான சேவை கிடையாது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×