search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புதிய வீடு கட்டி குடியேறும் போது செய்யக்கூடாதவை
    X

    புதிய வீடு கட்டி குடியேறும் போது செய்யக்கூடாதவை

    புதிய வீடு கட்டி குடியேறும் போது, செய்யக்கூடாதவை என்றும் சிலவற்றை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். இது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும், அதைச் செய்வதற்கு நம்மில் பலரும் நல்ல நாள், நல்ல நேரம், நன்மை தரும் மாதங்கள் என்று பார்த்து பார்த்து செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நாம் செய்யும் சுப காரியங்களில் புதியதாக வீடு கட்டி குடியேறும் நிகழ்வும் ஒன்று. புதிய வீட்டில் காலடி எடுத்து வைப்பதற்கான சிறந்த மாதம், நாள், நட்சத்திரம், லக்னம் எது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    புதிய வீடு கட்டி குடியேறும் போது, செய்யக்கூடாதவை என்றும் சிலவற்றை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். எந்த மாதத்தில் குடிபுக வேண்டும் என்பது போல, எந்த மாதத்தில் குடியேறக்கூடாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி...

    * ஆனி மாதத்தில் புதிய வீட்டில் குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த ஆனி மாதத்தில் தான், மகாபலி சக்கரவர்த்தி தனது ராஜ்ஜியம் முழுவதையும் இழந்தார்.

    * புதிய வீட்டிற்கு ஆடி மாதத்தில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த மாதத்தில் தான், இலங்கையை ஆட்சி செய்த ராவணன் தனது கோட்டையை இழந்தார்.

    * புரட்டாசி மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிபோவதை தவிர்ப்பதும் நல்லது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் பிரகலாதனின் தந்தையான இரணியன், தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.

    * புதிய வீட்டில் அடியெடுத்து வைக்க மார்கழி மாதமும் உகந்ததல்ல. ஏனென்றால், மகாபாரதத்தில் வரும் கவுரவர்களில் முக்கியமானவனான துரியோதனன் தனது ராஜ்ஜியத்தை இழந்தது, இந்த மாதத்தில் தான்.

    * மாசி மாதத்திலும் புதிய வீட்டில் குடிபோகக் கூடாது. ஏனெனில் அந்த மாதத்தில் தான், திருப்பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த, ஆலகால விஷத்தை அருந்தி, சிவபெருமான் மயக்கமுற்றார்.

    * பங்குனி மாதத்தில் புதிய வீட்டில் குடியேறுவதும் தவிர்க்க வேண்டிய ஒன்று. ஏனெனில் இந்த மாதத்தில் தான், இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும் மன்மதனை, சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார்.

    பொதுவாக ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி போன்ற மாதங்களில் வீடு கட்ட தொடங்குவது, புது வீட்டிற்கு குடி போகுதல் போன்ற சுப காரியங்கள் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
    Next Story
    ×