என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Byமாலை மலர்1 March 2018 3:34 AM GMT (Updated: 1 March 2018 3:34 AM GMT)
கோவையில் புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 13-ந்தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 20-ந்தேதி கோவில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
இதனைதொடர்ந்து 21-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை கோனியம்மன் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் சிம்ம, அன்னம், வெள்ளையானை, கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் அம்மன் பெருமையை விளக்கும் வகையில் வில்லுபாட்டு நிகழ்ச்சி, பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதன்பின்னர் நேற்று முன்தினம் கோனியம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓதுவார் கண்ணப்பனின் திருமுறை பாராயணத்தோடு பக்தர்கள் சூழ கோனியம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக ராஜவீதியில் உள்ள கோனியம்மன் திருத்தேர் அலங்கரிக்கும் பணி நடந்தது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. இதையொட்டி கோவை கோனியம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கோனியம்மன் உற்சவர் அதிகாலை 5.30 மணியளவில் பல்லக்கில் எழுந்தருளி ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வேதமந்திரம் முழங்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கோனியம்மன் எழுந்தருளினார்.
திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கோனியம்மன்.
நேற்று காலை முதல் ராஜவீதியில் திருத்தேர் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிய தொடங்கினார்கள். திருத்தேரில் எழுந்தருளிய கோனியம்மனை தரிசித்தனர். ஏராளமான பக்தர்கள் உப்பு, மிளகு வாங்கி திருத்தேர் மீது வீசி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். மதியம் 2.15 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூர் இளையபட்டம் மருதாச்சல அடிகளார், சரவணம்பட்டி கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், நாகராஜன் எம்.பி., அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம், உதவி ஆணையர் விமலா, செயல் அலுவலர் கைலாஷ் உள்ளிட்டோர் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து தேர்நிலைத்திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் ஆடி அசைந்து ஒப்பணக்கார வீதியை நோக்கி வந்தது. திருத்தேரின் முன்பும், பின்பும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி விட கூடாது என்பதற்காக திருத்தேரின் இருபுறமும் நீண்ட கயிற்றை கட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேர் ஆடி அசைந்து வந்தது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். திருத்தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக மாலையில் தேர்நிலைத்திடலை வந்து அடைந்தது.
கோலாகலமாக நடந்த கோவில் தேரோட்டத்தையொட்டி இந்து அமைப்புகள், வியாபாரிகள் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவையும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

Next Story
×