search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா 27-ந் தேதி தொடங்குகிறது
    X

    மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா 27-ந் தேதி தொடங்குகிறது

    புதுச்சேரியின் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா வருகிற 27-ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    புதுவை மணக்குள விநாயகர் கோவிலின் 59-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா வருகிற 27-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. விழாவையொட்டி அன்று காலை 6.30 மணிக்கும், பகல் 11 மணிக்கும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    அடுத்தநாள் 28-ந் காலை 9.30 மணிக்கு வெள்ளி மூஷிக வாகனத்திலும், 29-ந் தேதி சிம்ம வாகனம், வெள்ளி மயில் வாகனத்திலும், 30-ந் தேதி சூரியபிரபை வாகனம், வெள்ளி அதிகார நந்தி வாகனத்திலும், 31-ந் தேதி நாக வாகனம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்திலும் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி சித்தி புத்தி விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 2-ந் தேதி வெள்ளி பல்லக்கு, வெள்ளி யானை வாகன சாமி வீதி உலாவும், 3-ந் தேதி அன்ன வாகனம், இந்திர வாகனத்திலும், 4-ந் தேதி வெள்ளி கேடயம், குதிரை வாகனத்திலும் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    5-ந் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 6-ந் தேதி காலை 6.30 மணிக்கு நர்த்தன கணபதி உற்சவம், தேரடி உற்சவமும், காலை 9 மணிக்கு கடல் தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு அவரோஹணம் வெள்ளி மூஷிக வாகன வீதி உலாவும் நடைபெறுகிறது. 7-ந் தேதி காலை 11 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.

    விழாவில் 13-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 14-ந் தேதி விடையாற்றி உற்சவமும், 15-ந் தேதி விநாயகர் சந்திரபிரபை உற்சவமும், 16-ந் தேதி வெள்ளி மூஷிக வாகனத்திலும் வீதி உலாவும் நடக்கிறது. 17-ந் தேதி திருமுறை உற்சவமும், 19-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×