search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி கோவிலில் 3 நாட்களுக்கு நடைபாதை பக்தர்கள் தரிசனம் ரத்து
    X

    திருப்பதி கோவிலில் 3 நாட்களுக்கு நடைபாதை பக்தர்கள் தரிசனம் ரத்து

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களில் நடைபாதைகள் வழியாக வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சராசரியாக 25 ஆயிரம் பக்தர்கள் நடைபாதைகள் வழியாக திருமலைக்கு வந்து, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.

    இந்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி திருமலைக்கு நடந்து வந்த பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்பட்டது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதைகளில் சாதாரண நாட்களில் 25 ஆயிரம் பக்தர்களும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 50 ஆயிரம் பக்தர்களும் வந்து தரிசனம் செய்துள்ளனர்.



    நடைபாதைகள் வழியாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் இலவச தரிசனம், 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனம், வி.ஐ.வி. தரிசனம் ஆகியவற்றில் தரிசனத்துக்கு அதிக நேரம் ஆகிறது. எனவே திவ்ய தரிசன பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திவ்ய தரிசனம் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது.

    அன்படி நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபாதைகள் வழியாக வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த 3 நாட்களில் நடைபாதைகளில் வரும் பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று ஏழுமலையானை வழிபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×