என் மலர்

  ஆன்மிகம்

  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை பூஜைக்கு சிவாச்சாரியர்கள் புனிதநீர் அடங்கிய கலசங்களை கொண்டு வந்த காட்சி.
  X
  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை பூஜைக்கு சிவாச்சாரியர்கள் புனிதநீர் அடங்கிய கலசங்களை கொண்டு வந்த காட்சி.

  திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
  கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அக்கிள் நாயுடுதெரு எதிரில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. திருவந்திபுரம் செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இந்த கோவிலை இடித்து விட்டு ரூ.70 லட்சம் செலவில் புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது. பல வர்ணங்கள் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

  இதையொட்டி நேற்று முன்தினம் காலையில் விக்னேஷ்வர மற்றும் கலச பூஜையும், மாலையில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று கோ பூஜை, தன பூஜை, நவக்கிரக கலச பூஜை, ஹோமங்கள், தீபாராதனை நடந்தது. இரவு 8.30 மணி அளவில் புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் யாக சாலைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் தொடங்கியது.

  இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு விசேஷ சந்தி, யாக மண்டப பூஜை, வேதிகா பூஜை, கும்ப பூஜை, யாக பூஜை, விசேஷ திரவியாகுதி உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடக்கிறது. நாளை(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கன்யா பூஜை, தம்பதி பூஜை, 9 மணிக்கு மகா தீபாராதனை, யாத்ரா தானம் நடக்கிறது. தொடர்ந்து காலை 9.30 மணி அளவில் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடக்கிறது.

  9.55 மணி அளவில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் மூலவரான முத்தாலம்மன் மற்றும் விநாயகர், முருகன், வராஹி அம்மன் ஆகிய சாமி சிலைகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.
  Next Story
  ×