என் மலர்

  ஆன்மிகம்

  கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு வழிபாடு நடத்திய பெண்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.
  X
  கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு வழிபாடு நடத்திய பெண்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

  கொல்லங்கோடுபத்திரகாளியம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் பத்தாமுதய பொங்கல் வழிபாடு நேற்று நடந்தது.
  குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் வாழ வேண்டியும் ஆண்டுதோறும் மீனபரணி தூக்கத்திருவிழாவும் அதைதொடர்ந்து பத்தாமுதயம் விழாவும் நடப்பது வழக்கம். பத்தாமுதயம் அன்று பொங்கல் வழிபாடு, லட்சார்ச்சனை, சுத்திகலசம் போன்ற சடங்குகள் நடைபெறும்.

  இந்த ஆண்டுக்கான தூக்கத்திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 30-ந் தேதி நடந்தது. இதில், குமரி மாவட்டம், கேரளா போன்ற பகுதிகளை சேர்ந்த ஏராளமான குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது.  இதையொட்டி பத்தாமுதயம் விழா நேற்று நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வாக பொங்கல் வழிபாடு நடைபெற்றது. தேவஸ்தான தந்திரி கலந்து கொண்டு பண்டார அடுப்பில் தீ வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

  அதைத்தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இதில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
  Next Story
  ×