என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்4 April 2017 3:45 AM GMT (Updated: 4 April 2017 3:45 AM GMT)
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் 3-ம் படை வீடு என்னும் சிறப்பு பெற்ற பழனி திருத்தலத்தில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா திருஆவின்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் கொண்டாப்படும் இத்திருவிழாவில் தினசரி காலை 8.00 மணிக்கு மேல் தந்த பல்லக்கில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் முத்து குமார சுவாமி வள்ளி-தெய்வநாயகி அம்மனுடன் திருவுலா காட்சியும், இரவு 8.00 மணிக்கு மேல் வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டு கிடா, தங்கமயில், வெள்ளி யானை, தங்க குதிரை, வெள்ளி பிடாரி மயில், புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
பங்குனி உத்திரத் திரு விழாவின் 6-ம் திருநாளான வருகிற 8-ந் தேதி இரவு 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் துலா லக்கினத்தில் முத்து குமார சுவாமி, வள்ளி-தெய்வநாயகி அம்மன் திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு திருமண கோலத்தில் வெள்ளி ரதத்தில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் திருவுலா காட்சியும் நடைபெறுகிறது.
9-ந் தேதி பங்குனி உத்திரத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளல், காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல், காலை 8.55 மணிக்கு திரு ஆவினன் குடி கோவிலில் தந்த பல்லக்கில் எழுந்தருளலும், காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மிதுனலக்கினத்தில் தேரேற்றமும், மாலை 4.20 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும், தொடர்ந்து இரவு 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
10-ந் தேதி அன்று இரவு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி வள்ளி - தெய்வானை திருவுலா காட்சி நடைபெறுகிறது. 11-ந் தேதி இரவு 7.30 மணிக்கு மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், 12-ந் தேதி காலை 7.20 மணிக்கு திரு ஆவினன்குடி கோவிலில் அபிஷேக ஆராதனை, 10.45 மணிக்கு சாந்து மண்டகப்படி, இரவு 11 மணிக்கு திருவிழா நிறைவு பெற்று கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வருகிற 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா, முதுநிலை கணக்கு அதிகாரி வீராச்சாமி மற்றும் கோவில் அலுவலர்கள் செய்துள்ளனர்.

Next Story
×