என் மலர்

  ஆன்மிகம்

  சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா இன்று தொடங்குகிறது
  X

  சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா இன்று தொடங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்திப்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இதையொட்டி ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குண்டம் இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள்.

  தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதிக்கும் ஒரே கோவில் பண்ணாரி அம்மன் கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பக்தர்கள் தங்களுடைய கால்நடைகளையும் குண்டம் இறக்கி நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

  இவ்வளவு பிரசித்திப்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலின் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா இன்று (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.  இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. பின்னர் சருகு மாரியம்மன் மற்றும் கோவிலில் உள்ள பரிவார சாமிகளுக்கும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மலர் வைத்து அம்மனிடம் வரம் கேட்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வரம் கிடைத்த உடன் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன், சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

  இதைத்தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு சப்பரத்தில் பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மனின் உற்சவ சிலைகள் சப்பரத்தில் வைக்கப்பட்டு வீதி உலாவாக சிக்கரசம்பாளையத்தை சென்றடைகிறது. பண்ணாரியை சுற்றி உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்மன் வீதி உலா நடக்கிறது.

  முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது. அப்போது ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
  Next Story
  ×