என் மலர்

  ஆன்மிகம்

  திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது
  X

  திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரசித்தி பெற்ற திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிகள் உடனுறை வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் இன்று காலை 9 மணியளவில் நடக்க உள்ளது.
  பிரசித்தி பெற்ற திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிகள் உடனுறை வடிவுடையம்மன் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 3-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் இரவில் தியாகராஜ சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணியளவில் கோவில் முன்பு உள்ள 16 கால் மண்டபம் முன் அலங்கரிக்கப்பட்ட 41 அடி உயர மரத்தேரில் உற்சவர் தியாகராஜ சுவாமிகள் உடனுறை வடிவுடையம்மன் எழுந்தருளுகிறார்.   பின்னர் சிவாச்சாரியார்கள் பச்சை கொடி அசைத்து தேரோட்டத்தை தொடங்கிவைக்கிறார்கள்.

  பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, மாடவீதிகளில் தேர் வீதி வீதியாக வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடையும்.
  Next Story
  ×