என் மலர்

  ஆன்மிகம்

  சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 10-ந்தேதி திருக்கல்யாண விழா
  X

  சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 10-ந்தேதி திருக்கல்யாண விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் திருக்கல்யாண விழா வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
  சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண திருவிழா கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் வாகன பவனியும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது.

  இந்த கோவிலில் 573-வது திருக்கல்யாண விழா வருகிற 10-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு பறக்கையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கு புனித நீராட்டு விழா நடக்கிறது. அம்மன் மணப்பெண் கோலத்தில் ஆசிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்படுவார். மாலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மனை வைத்து மேளதாளத்துடன், பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வருவார்கள்.

  இரவு 7.30 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் தாணுமாலயசாமி கையில் திருமாங்கல்யத்தை வைத்து அருகில் அறம்வளர்த்த நாயகி அம்மனையும் வைப்பர். தாணுமாலசாமி கையில் உள்ள திருமாங்கல்யம், வேதமந்திரங்கள் முழங்க, மணியோசை ஒலிக்க, பெண்கள் குலவையிட, பக்தர்கள் ‘சிவாய... நம...’ என குரல் எழுப்ப, அறம்வளர்த்த நாயகி அம்மன் கழுத்தில் கட்டப்படும்.  திருமணத்திற்கு சாட்சியாக கருட வாகனத்தில் திருமால் இருப்பார். திருக்கல்யாண விழா முடிந்தவுடன், பக்தர்களுக்கு சந்தனம், குங்குமம், வெற்றிலை, மஞ்சள்கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும். அதன்பின்னர், சுவாமியும், அம்மனும் பக்தர்களுக்கு காட்சிதர எழுந்தருளுவர்.

  11-ந் தேதி மாலை 4 மணிக்கு இந்திரன் தேராகிய சப்பர தேரில் அறம்வளர்த்த நாயகி அம்மன் நான்கு ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் பாரதி தலைமையில் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
  Next Story
  ×