என் மலர்

  ஆன்மிகம்

  சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளிய போது எடுத்த படம்.
  X
  சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளிய போது எடுத்த படம்.

  மேல்மலையனூரில் மாசிப்பெருவிழா: புஷ்ப பல்லக்கில் அங்காளம்மன் வீதியுலா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலிலில் நடைபெற்றுவரும் மாசிப்பெருவிழாவில் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 24-ந்தேதி சிவராத்திரி அன்று மாசிப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி கடந்த 25-ந்தேதி மயானக்கொள்ளை விழாவும், 28-ந்தேதி தீ மிதி திருவிழாவும், 2-ந்தேதி தேரோட்டமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் 9-ம் நாளான நேற்று முன்தினம் இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

  இதையொட்டி கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் விநாயகர், அங்காளம்மன், முருகர் ஆகிய சாமிகள் வீதிஉலா நடைபெற்றது. இதில் மேல்மலையனூர், செஞ்சி, திண்டிவனம் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை பூசாரி, அறங்காவலர்கள் ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, அறநிலையத்துறை ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

  Next Story
  ×