என் மலர்

  ஆன்மிகம்

  சேலம் கோட்டை மைதானத்தில் பஞ்ச கருடசேவை உற்சவம்
  X

  சேலம் கோட்டை மைதானத்தில் பஞ்ச கருடசேவை உற்சவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று இரவு பஞ்ச கருட சேவை உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  சேலம் கோட்டை அழகிரிநாதர் சுவாமி கோவிலின் ஆண்டாள் இளைஞர் குழு மற்றும் ஆண்டாள் மாதர் சங்கம் சார்பில் 37-ம் ஆண்டு விழாவையொட்டி பஞ்ச கருட சேவை நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை கோட்டை பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், கருடாழ்வாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

  பின்னர் மாலையில் பஞ்ச கருட சேவை உற்சவம் நிகழ்ச்சி கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இதையொட்டி, சேலம் கோட்டை அழகிரிநாதசாமி கோவில், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், 2-வது அக்ரஹாரம் லட்சுமி நாராயண சாமி கோவில், அம்மாபேட்டை பாவநாராயண சாமி கோவிலில் இருந்து பெருமாள் சாமிகள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் ஊர்வலமாக ஒன்றின்பின் ஒன்றாக அழைத்து வரப்பட்டனர்.

  இதைத்தொடர்ந்து கோட்டை மைதானத்தில் 5 கோவில்களில் இருந்து வந்த பெருமாள்களும், கோட்டை பெருமாள் கோவில் ஆண்டாள், கருடாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த பஞ்ச கருட சேவை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று 5 பெருமாள்களை தரிசனம் செய்தனர்.

  பஞ்ச கருட சேவையின்போது பெருமாளை தரிசனம் செய்தால் பக்‌ஷிதோஷம், நாகதோஷம் போன்ற தோஷங்கள் அனைத்தும் விலகுவதோடு, சகல சவுபாக்கியங்களும் வாழ்வில் கிடைக்கும் என்பது ஐதீகம். பின்னர், சாமிகள் சேலம் முதல் அக்ரஹாரம், 2-வது அக்ரஹாரம், பட்டை கோவில், சின்ன கடை வீதி, பெரிய கடைவீதி வழியாக கன்னிகா பரமேஸ்வரி கோவில் அருகில் வந்து, அதன்பிறகு அங்கிருந்து சாமிகள் அந்தந்த கோவில்களுக்கு ஊர்வலமாக சென்றன.

  விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு கோட்டை பெருமாள் கோவிலில் வாரி விஸ்வரூப தரிசன நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு பெருமாள், ஆண்டாள் சீர் வரிசைகளுடன் நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு நவகலச திருமஞ்சனம், நீராட்டம், கட்டியம் சேவித்தல் நிகழ்ச்சியும், காலை 10.30 மணிக்கு திருக்கல்யாண விசேஷ அலங்காரமும், சாமி உள்புறப்பாடும், மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

  காலை 11 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசையுடன் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்மாலை அழகிரிநாத பெருமாளுக்கு சாத்துபடி செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்கு திருக்கல்யாண மகோத்சவம் நடக்கிறது.
  Next Story
  ×