என் மலர்

  ஆன்மிகம்

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விமானம் சீரமைப்பு: பக்தர்கள் தரிசனம் செய்ய மாற்று ஏற்பாடு
  X

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விமானம் சீரமைப்பு: பக்தர்கள் தரிசனம் செய்ய மாற்று ஏற்பாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விமானம் சீரமைக்கப்பட உள்ளதை அடுத்து பக்தர்கள் தரிசனம் செய்ய மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் இணை-கமிஷனர் த.காவேரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு ஸ்ரீருக்மணி தாயார் சமேத ஸ்ரீ வேங்கடகிருஷ்ணன் மூலவர் ஆனந்த விமானம் சமீபத்தில் ஏற்பட்ட வார்தா புயலாலும் மற்றும் மழையின் காரணமாகவும் பழுது ஏற்பட்டது. இதனை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  அதன்படி நாளை (சனிக்கிழமை) முதல் 8-ந்தேதி வரை பணிகள் நடக்கிறது. எனவே மூலவர் சேவை 9-ந்தேதி அன்று நடைபெறும். அதுவரை உற்சவர் பார்த்தசாரதி சாமியை கோவிலின் கண்ணாடி அறையில் பொதுமக்கள், பக்தர்கள் தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

  இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
  Next Story
  ×