search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாசியம்நகர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை, குருபெயர்ச்சி திருவிழா
    X

    பாசியம்நகர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை, குருபெயர்ச்சி திருவிழா

    பெங்களூரு பாசியம்நகரில் உள்ள சுப்பிர மணியசுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை, குருபெயர்ச்சி திருவிழா கொண்டாடப்பட உள்ளது.
    அடுத்த மாதம் 2-ந் தேதி அன்று காலை 9.27 மணிக்கு குருபகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்கிறார். இதையொட்டி பெங்களூரு பாசியம்நகரில் உள்ள ஸ்ரீசுப்பிரமணியசுவாமி தேவஸ்தானத்தில் ஆடிக்கிருத்திகை, குருபெயர்ச்சி திருவிழா நடைபெறுகிறது.

    மேலும், குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு யாகமும் நடத்தப்பட உள்ளது. 1-ந் தேதி அன்று யாக பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை சங்கல்பம் சொல்லப்படுகிறது. ஒரு சங்கல்பத்திற்கு 5 பெயர்கள் மட்டுமே சொல்லப்படும்.

    பின்னர் 2-ந் தேதி அன்று காலை 7.30 மணிக்கு யாக பூஜை தொடங்குகிறது. காலை 9 மணிக்கு சிறப்பு பூஜைகளும், 9.30 மணிக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகிறது. 10 மணிக்கு மகா மங்கள ஆரத்தி காட்டப்படுகிறது. பின்னர் 11 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதமும், யாக பூஜை பிரசாதமும் வழங்கப்படுகிறது.

    முன்னதாக வருகிற 28-ந் தேதி(நாளை மறுநாள்) ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமியாக வீற்றிருக்கும் முருகனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், 7.30 மணிக்கு மகா மங்கள ஆரத்தியும் காட்டப்படுகிறது. காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை காவடி பூஜை, அர்ச்சனை ஆகியவை நடைபெறுகிறது.

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகத்தார் தெரிவித்தனர்.
    Next Story
    ×