search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதி ஆடித்திருவிழா தொடங்கியது
    X

    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதி ஆடித்திருவிழா தொடங்கியது

    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது
    திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் நேற்று ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு கொடிபதியை சுற்றி வந்தது. 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு புஷ்பவாகனத்தில் அய்யா பவனி வந்தார். தொடர்ந்து அன்னதர்மம் நடந்தது. பின்னர் மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு பணிவிடை, 1 மணிக்கு அன்னதர்மம் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு திருஏடு வாசிப்பு மாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடைபெறுகிறது.

    11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் இரவு 6 மணிக்கு அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வருதல், இரவு 8 மணிக்கு அன்னதர்மம் இனிமம் வழங்குதல் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 11ம் திருவிழாவான ஆகஸ்டு 1 ந்தேதி (திங்கட்கிழமை) பகல் 12.05 க்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    Next Story
    ×