search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமநாதபுரத்தில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்
    X

    ராமநாதபுரத்தில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்

    ராமநாதபுரத்தில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    ராமநாதபுரம் திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில், ராமானுஜர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் மற்றும் ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா நடைபெற்றது.

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு, கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் காப்புக்கட்டும் உற்சவமும், யாக சாலை பூஜைகளும் தொடங்கின. ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் சீனிவாசப் பெருமாள் எழுந்தருளினார். பின்னர், திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் பட்டாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    சுவாமிக்கு திருமணப்பட்டும், அம்மனுக்கு பட்டுச் சேலையும் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அதையடுத்து, மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

    திருக்கல்யாண விழாவை நடத்துவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த பட்டாச்சாரியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் வந்திருந்தனர். திருப் பதி தேவஸ்தானத்தின் சார்பில் பிரசாதமாக, மாங்கல்ய கயிறு, குங்குமம் வழங்கப்பட்டன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை, திரவுபதி அம்மன் கோவில் நிர்வாகக் குழு மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். இந்த வைபவத்தில், ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×