search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பள்ளிகொண்டா உத்திர ரங்கநாத கோவிலில்  இன்று நடக்கும் கஜேந்திர மோற்ச உற்சவம்
    X

    பள்ளிகொண்டா உத்திர ரங்கநாத கோவிலில் இன்று நடக்கும் கஜேந்திர மோற்ச உற்சவம்

    பள்ளிகொண்டா உத்திர ரங்கநாத கோவிலில் இன்று நடக்கும் கஜேந்திர மோற்ச உற்சவம்
    தமிழகத்தில் உள்ள வைணவ திருத்தலங்களில் வேலூர் அடுத்த பள்ளிகொண்டா உத்திர ரங்கநாத கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி, திருக்கல்யாண உற்சவம், பவித்தோற்சவம், கருட சேவை ஆகிய மட்டுமே கொண்டாடப்பட்டு வந்தது.

    50 ஆண்டுகளுக்கு முன்புவரை தொன்று தொட்டு நடைபெற்று வந்த கஜேந்திர மோற்ச உற்சவம் பல்வேறு காரண, காரணிகளால் தடைபட்டது. கஜேந்திர மோற்சம் என்பது, முந்தைய காலக் கட்டத்தில் உத்திர ரங்கநாத கோவில் குளத்தில் கோவில் யானை ஒன்று நீர் பருக சென்றது.

    அப்போது, குளத்தில் இருந்த கொடிய முதலை ஒன்று யானையின் கழுத்தை கவ்வியது. முதலையிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பெருமாளை வேண்டி யானை பிளிறி அழைத்தது.

    யானை வேண்டியதற்கு ஏற்ப அடுத்த நொடியே எம்பெருமான் கருட வாகனத்தில் அங்கு தோன்றினார்.

    யானையை காப்பாற்றி முதலைக்கு மோற்சம் அளித்தார். இந்த அற்புத நிகழ்வு கஜேந்திர மோற்சவ உற்சவமாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 50 ஆண்டுகளாக கொண்டாடப்படாமல் இருந்த கஜேந்திர மோற்சவ உற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி, நாளை காலையில் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்று அலங்கார சேவை நடைபெறும். அதைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கருட வாகனத்தில் ரங்கநாதர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    கஜேந்திர மோற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குமரன் மற்றும் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×