என் மலர்

  ஆன்மிகம்

  காரைக்காலம்மையார் கோவில் மாங்கனித் திருவிழா இன்று தொடங்குகிறது
  X

  காரைக்காலம்மையார் கோவில் மாங்கனித் திருவிழா இன்று தொடங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காரைக்காலம்மையார் கோவில் மாங்கனித் திருவிழா இன்று மாலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது.
  காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற காரைக்காலம்மையார் கோவிலில் காரைக்காலம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஒரு மாத காலத்திற்கு ‘மாங்கனித் திருவிழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதியுடன் நிறைவடைகிறது.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணமும், மாலை 6-30 மணிக்கு சாமி பிச்சாண்டவ மூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும், இரவு 10 மணியளவில் காரைக்காலம்மையார் கணவர் பரமதத்த செட்டியாரும் முத்துப்பல்லக்கில் வீதி உலாவும் நடைபெறுகிறது.

  நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9-05 மணிக்கு சாமி அடியார் கோலத்தில் வீதி உலா புறப்பாடு மற்றும் மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சியும், மாலை 6-10 மணியளவில் உலகிற்கே உணவளிக்கும் சிவ பெருமானுக்கு காரைக்காலம்மையார் அமுது படைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

  இன்று 17-ந் தேதி இரவு 7-30 மணி அளவில் பரமதத்த செட்டியாரை ஆற்றங்கரை சித்திவிநாயகர் கோவிலிலிருந்து ஊர்வலமாக அழைத்து வரும் (மாப்பிள்ளை அழைப்பு) நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில்கள் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தேவஸ்தான தனி அதிகாரி ஆசைத்தம்பி ஆகியோர் செய்துள்ளனர்.
  Next Story
  ×