என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்
Byமாலை மலர்28 May 2016 10:06 AM IST (Updated: 28 May 2016 10:06 AM IST)
பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் கிராமத்தில் மிகவும் பழமையான கனகவள்ளி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் உள்ளது. நடு நாட்டு திருத்தலங்களில் ஒன்றாக இக்கோவில் இருக்கிறது. இந்த கோவில் கற்பகிரகத்தில் உள்ள ஆஞ்சநேயர் சிலை வியாசர் முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். இதேபோல் ஒரே சன்னதியில் இரட்டை ஆஞ்சநேயர் அமைய பெற்று இருப்பதும் இந்த கோவிலின் கூடுதல் சிறப்பம்சமாகும்.
இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து, சிம்மம், யானை, குதிரை, கருடன் உள்ளிட்ட வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
கடந்த 24-ந்தேதி லட்சுமி நரசிம்மருக்கு திருக்கல்யாணம் நடந்தது. 8-ம் திருவிழாவான நேற்று இரவு லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார்.
விழாவில் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 8 மணிக்கு அங்கு அலங்கரிக்கப்பட்டு இருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் லட்சுமி நரசிம்மர், கனகவள்ளி தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
பின்னர் தேருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து குமரகுரு எம்.எல்.ஏ. வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஓம் நமோ நாராயணா....! ஓம் நமோ நாராயணா....! என்ற பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடியபடி 4 மாட வீதிகள் வழியாக வலம் வந்து, 10.30 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது. அதன்பின்னர் 11 மணிக்கு கோவில் குளத்தில் சாமிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
10-ம் திருவிழாவான இன்று(சனிக்கிழமை) மட்டையடி உற்சவமும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Next Story
×