என் மலர்

  ஆன்மிகம்

  மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் வைகாசி விசாக விழா
  X

  மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் வைகாசி விசாக விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோழவந்தான் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
  மதுரை அடுத்து சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் பழமையான கோவில்களில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ விழாவும், பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜையும், திருக்கல்யாணம் மற்றும் வைகாசி விசாக விழாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

  இங்கு வருடந்தோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று மதுரை ஆதித்யா புட் உரிமையாளர்கள் சார்பில் நடைபெற்றது. வைகாசி விசாக திருவிழாவின் 3 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் கோவில் நடைபெறுகிறது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானையுடன் கூடி முருகப்பெருமானுக்கு தனி சன்னதி உள்ளது.

  இதையொட்டி இந்த பகுதியில் உள்ள பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். விசாகத்தன்று குழந்தைகள் முதல் பெண்கள், ஆண்கள் ஆகியோர் அழகு குத்தி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக அவர்கள் வைகையாற்றுக்குச் சென்று பூஜைகள் செய்து பால்குடம் எடுத்து கிராமத்தைச் சுற்றி வந்து கோவிலை அடைந்தனர்.

  பின்பு கோவிலில் உள்ள முருகன், வள்ளி, தெய்வானைக்கு பால் அபிஷேகம் உள்பட 12 அபிஷேகங்கள் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திருக்கோவில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள், பிரதோஷ கமிட்டியினர் உள்பட கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்து இருந்தனர்.
  Next Story
  ×