என் மலர்

  ஆன்மிகம்

  திட்டக்குடி அரங்கநாத பெருமாள் கோவில் தேர் திருவிழா
  X

  திட்டக்குடி அரங்கநாத பெருமாள் கோவில் தேர் திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திட்டக்குடி அரங்கநாத பெருமாள் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  திட்டக்குடி வதிஷ்டபுரத்தில் அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி, தினமும் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வந்தது. தொடர்ந்து பெருமாள் திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடந்தது.

  இதனை தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேர் திருவிழா நடந்தது. இதையொட்டி, சமேத அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர், கோவில் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியக சென்று மீண்டும் நிலைக்கு வந்தது. பின்னர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  Next Story
  ×