search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எறும்புக்காடு முத்தாரம்மன் கோவில் கொடை விழா 23-ந் தேதி தொடங்குகிறது
    X

    எறும்புக்காடு முத்தாரம்மன் கோவில் கொடை விழா 23-ந் தேதி தொடங்குகிறது

    எறும்புக்காடு முத்தாரம்மன் கோவில் கொடை விழா வருகிற 23-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    எறும்புக்காடு முத்தாரம்மன் கோவில் கொடை விழா வருகிற 23-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. விழா முதல் நாளில் அதிகாலை 4 மணிக்கு கணபதிஹோமம், காலை 8 மணிக்கு தீபாராதனை, காலை 10 மணி மற்றும் மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9.30 மணிக்கு வில்லிசை நடக்கிறது.

    24-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பக்தி மஞ்சரி, காலை 9 மணிக்கு வில்லிசை, மதியம் 1.30 மணிக்கு அலங்கார பூஜை, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு அம்மன் அலங்கார வாகனத்தில் பவனி வருதல் நடைபெறும். திருவிழா இறுதி நாளான 25-ந் தேதி காலை 9 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம் போன்றவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×