என் மலர்

  ஆன்மிகம்

  முருகனின் வாகனம் மயிலாக வீற்றிருக்கும் இந்திரன்
  X

  முருகனின் வாகனம் மயிலாக வீற்றிருக்கும் இந்திரன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கழுகாசலமூர்த்தி திருத்தலத்தில் இந்திரனே, முருகப்பெருமானின் வாகனமான மயிலாக வீற்றிருக்கிறான்.
  தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ளது கழுகாசலமூர்த்தி திருக்கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானே, 'கழுகாசலமூர்த்தி' என்று அழைக்கப்படுகிறார். பிற முருகன் ஆலயத்தில், அசுரன்தான் மயிலாக இருப்பான். எனவே மயிலின் முகம் முருகனுக்கு வலது பக்கமாக இருக்கும். ஆனால் இந்தத் திருத்தலத்தில் இந்திரனே, முருகப்பெருமானின் வாகனமான மயிலாக வீற்றிருக்கிறான்.

  ஆகவே இந்தத் தலத்தில் முருகனுக்கு இடது பக்கமாக மயில் முகம் காணப்படுகிறது. இதன் காரணமாக சூரசம்ஹாரத்தின் போது இந்த மயிலின் முகம் மூடப்பட்டிருக்கும். இங்கு முருகனுக்கு தனி பள்ளியறையும், சிவபெருமானுக்கு தனி பள்ளியறையும் அமைந்திருக்கிறது.
  Next Story
  ×