என் மலர்

  ஆன்மிகம்

  தென்கரை ஆதிமூலநாத சுவாமி- அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம்
  X

  தென்கரை ஆதிமூலநாத சுவாமி- அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோழவந்தான் அருகே உள்ள தென்கரை ஆதிமூலநாதர் சுவாமி -அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.
  சோழவந்தான் அருகே உள்ள தென்கரை ஆதிமூலநாதர் சுவாமி -அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இங்கு நடைபெறும் விழாக்களில் முக்கிய விழாவான ஆதிமூலநாதர் சுவாமி- அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பஞ்சமூர்த்தி புறப்பாடும், அம்மன், சுவாமி அழைப்பும் நடந்தது.

  இங்குள்ள கோட்டைவாசல் விநாயகர் கோவிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள், பிரதோஷ கமிட்டியினர் சீர்வரிசை எடுத்து கோயில் திருமண மண்டபத்தை அடைந்தனர். பட்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், பாலாஜி ஆகியோர் யாக பூஜைகள் நடத்தினர். நாகராஜன் பட்டர் சுவாமியாகவும், நாகேஸ்வர பட்டர் அம்மனாகவும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பெண்கள் தங்களது தாலியை எடுத்து குங்குமம் இட்டு கண்களில் ஒற்றிக் கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  விழா ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியினர், செயல் அலுவலர் விஸ்வநாத், ஆலய பணியாளர் வெங்கடேசன், கிருஷ்ணன் செய்து இருந்தனர்.

  Next Story
  ×