என் மலர்

  ஆன்மிகம்

  சீர்காழி சட்டைநாதர் கோவில் சப்பரம் வீதிஉலா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
  X

  சீர்காழி சட்டைநாதர் கோவில் சப்பரம் வீதிஉலா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழாவையொட்டி சப்பரம் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருமுலைப்பால் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 13-ந் தேதி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழா நடைபெற்றது.

  இதனை தொடர்ந்து 5-ம் நாள் விழாவாக நேற்று முன்தினம் சப்பரம் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி அம்மன், திருஞானசம்பந்தர், முருகன், விநாயகர் ஆகிய சாமிகளுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து ஆராதனை காண்பிக்கப்பட்டது.

  தொடர்ந்து அனைத்து சாமிகளும் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருள செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் கலந்து கொண்டு சப்பரத்தை வடம் பிடித்து இழுத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 4 வீதிகளில் வலம்வந்த சப்பரம் கோவிலை வந்தடைந்தது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  Next Story
  ×