
வக்கரன் உயிரை வவ்வக்
கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரம் கொடுப்பர் போலும்!
தானவர் தலைவர் போலும்!
துக்கமா மூடர் தம்மைத்
துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை யார்ப்பர்
போலும் ஆவடுதுறையனாரே.
விடைதரு கொடியர் போலும்!
வெண் புரி நூலர் போலும்!
படைதரு மழுவர் போலும்!
பாய்புலித் தோலர் போலும்!
உடைதரு கீளர் போலும்!
உலகமும் ஆவார் போலும்!
அடைபவர் இடர்கள்
தீர்க்கும் ஆவடுதுறையனாரே.
இந்த அற்புத தேவார பாடலை தினமும் காலையில் குளித்து முடித்ததும், நெற்றியில் திருநீறு அணிந்து சிவபெருமானை மனதார நினைத்து, ஒரு முறையோ அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு என்றில்லாமல் உங்களால் முடிந்த வரை துதிக்கலாம். சக்தி வாய்ந்த இந்த தேவார பதிகங்களை துதிப்பவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் ஏற்படுகின்ற இன்னல்கள் விரைவில் நீங்குவதை அனுபவப் பூர்வமாக உணரலாம். எதிரிகள் குறித்த பயமும் மனதிலிருந்து முற்றிலும் நீங்கும்.