
எனவே இவர்களும் சனிக்கிழமை விரதத்தை தொடர்ந்து கடை பிடித்து வந்தால் இவர்களுக்கும் நல்ல பலன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. மற்றும் மற்ற ராசிக்காரர்களும் சனி கிழமை விரதத்தை கடைப்பிடித்து வர அவர்களிடமிருந்து துன்பம் தரக் கூடிய தீயபலன்கள் விலகி, நல்ல பலன்கள் கிடைக்க பெறுகின்றனர். இவ்வாறு முறையாக சனிக்கிழமை விரதத்தை பின்பற்றி வரும் அனைவருக்கும் செல்வம், ஆரோக்கியம், ஆயுள் ஆகிய முப்பலன்கள் நிச்சயம் கிடைக்கிறது.
சனிக்கிழமை நாளில் மாலைநேரத்தில் கோவிலுக்கு சென்று, சனிபகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாத்தி, கருப்பு எள் மற்றும் வேகவைத்த சாதம் இவற்றை படைத்து, தீபமேற்றி வழிபட்டு வந்தாலும் உங்களுக்கு நல்ல நற்பலன்கள் கிடைக்கும்.